EDUCATIONAL SUPPORT
Theeraa AramSeivom (TAS) identifies children and students who face genuine barriers to education and provides support to help them continue their learning and build a better future.
TAS may identify children who are without adequate parental support, children from families facing severe financial hardship, and students living in remote areas whose education may be affected by their circumstances.
Where appropriate, TAS may help eligible children and families identify and access available government educational welfare schemes and benefits.
For economically disadvantaged children, including children who have parents but face serious financial difficulties, TAS may provide educational support and, where necessary, help coordinate medical assistance and other essential support.
TAS also aims to connect genuine educational needs with sponsors and well-wishers who are willing to support students through appropriate and transparent channels.
For children and students living in remote areas, TAS may provide necessary support so that distance and difficult circumstances do not become a barrier to education.
In the future, TAS may also explore new educational initiatives that identify individual talents and provide practical, scientific and skill-based learning opportunities, with special attention to children who may need additional educational support.
Our aim is not only to support a child's education today, but also to help create opportunities for a better and more independent future.
கல்வி உதவி
கல்வியை தொடர்ந்து பயில்வதில் உண்மையான தடைகளை எதிர்கொள்ளும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை தீரா அறம்செய்வோம் (TAS) கண்டறிந்து, அவர்களின் கல்வி தொடரவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் தேவையான உதவிகளை வழங்குகிறது.
போதுமான பெற்றோர் ஆதரவு இல்லாத குழந்தைகள், மிகவும் பின்தங்கிய பொருளாதார சூழ்நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பதால் கல்வி பாதிக்கப்படக்கூடிய மாணவர்களை TAS கண்டறிந்து தேவையான உதவிகளை வழங்க முயற்சிக்கிறது.
தகுதியுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு கல்வி நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளை கண்டறிந்து, அவற்றை பெறுவதற்கான வழிகாட்டுதலையும் TAS வழங்கலாம்.
பெற்றோர் இருந்தும் மிகவும் பின்தங்கிய பொருளாதார நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவதுடன், தேவையான சூழ்நிலைகளில் மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளையும் ஒருங்கிணைக்க TAS முயற்சிக்கலாம்.
உண்மையான கல்வித் தேவைகளை, மாணவர்களுக்கு உதவ விரும்பும் Sponsors மற்றும் நலன்விரும்பிகளுடன் உரிய மற்றும் வெளிப்படையான முறையில் இணைத்து உதவிகளை நிறைவேற்றுவதையும் TAS நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கல்வி, அவர்கள் வசிக்கும் இடம் அல்லது சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான உதவிகளை வழங்க TAS முயற்சிக்கும்.
எதிர்காலத்தில், குழந்தைகளின் தனித்திறன்களை கண்டறிந்து, அறிவியல், நடைமுறை மற்றும் திறன் சார்ந்த கற்றல் வாய்ப்புகளை உருவாக்கும் புதிய கல்வி முயற்சிகளையும் TAS ஆராய்ந்து செயல்படுத்தலாம். கூடுதல் கல்வி ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் வழங்கப்படும்.
இன்றைய கல்விக்கு மட்டும் உதவுவது அல்ல; ஒரு குழந்தையின் சிறந்த மற்றும் சுயநிறைவு கொண்ட எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் எங்களின் நோக்கமாகும்.