Theeraa AramSeivom
தீரா அறம்செய்வோம்
(யாதும் ஊரே யாவரும் கேளிர்)
தீரா அறம்செய்வோம்
(யாதும் ஊரே யாவரும் கேளிர்)
Theeraa AramSeivom (TAS) Social Welfare Organisation
Theeraa AramSeivom (TAS) Social Welfare Organisation is a community-driven social service initiative built on the belief that every person deserves care, dignity and a helping hand.
For the past several years, we have been coming together as a community to support people who are facing difficult circumstances. Our service activities include providing food to people in need, essential groceries and basic necessities to vulnerable families, medical assistance, support for children and education, and assistance for persons with disabilities and the elderly.
We believe that social service is not only about giving—it is about standing beside someone when they need support the most. Through the collective contribution, time and effort of our members and well-wishers, TAS strives to identify genuine needs, extend meaningful assistance and bring hope to families in difficult situations.
Our vision is simple:
“Connecting People. Creating Hope. Serving Humanity.”
We welcome everyone who believes in kindness, compassion and community service to join hands with us and help create a society where no one feels alone in their time of need.
தீரா அறம்செய்வோம் (TAS) சமூக நல அமைப்பு
தீரா அறம்செய்வோம் (TAS) சமூக நல அமைப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அக்கறை, மரியாதை மற்றும் உதவிக்கரம் கிடைக்க வேண்டும் என்ற மனிதநேய எண்ணத்தின் அடிப்படையில் செயல்படும் ஒரு சமூக சேவை குழுவாகும்.
கடந்த சில ஆண்டுகளாக, தேவையிலும் சிரமத்திலும் இருக்கும் மக்களுக்கு ஆதரவாக எங்களால் இயன்ற பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேவையுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் சிரமப்படும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், மருத்துவ உதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்களைப் பொறுத்தவரை சமூக சேவை என்பது வெறுமனே பொருளை வழங்குவது மட்டுமல்ல; ஒருவருக்கு உதவி மிகவும் தேவைப்படும் நேரத்தில் அவர்களுடன் துணை நிற்பதே உண்மையான மனிதநேயம்.
எங்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் நல்ல உள்ளங்களின் கூட்டு பங்களிப்பு, நேரம் மற்றும் முயற்சியின் மூலம், உண்மையான தேவைகளை கண்டறிந்து, பொருத்தமான உதவிகளை வழங்கி, சிரமத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கமாகும்.
“மக்களை இணைப்போம் • நம்பிக்கையை உருவாக்குவோம் • மனிதநேயத்தை வளர்ப்போம்”
அன்பு, இரக்கம் மற்றும் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் எங்களுடன் இணைந்து, உதவி தேவைப்படும் நேரத்தில் யாரும் தனிமையில் இருக்காத ஒரு சமூகத்தை உருவாக்க கைகோர்க்கலாம்.
Our Policy
Theera Aram Seivom (TAS) Social Welfare Organisation.
"Unconditional Service • Absolute Transparency • Dignity First".
Theera Aram Seivom is a grassroots, community-driven welfare organization dedicated to uplifting the vulnerable, elderly, and underprivileged across Tamil Nadu.
Our Core Pillars:
Micro-Contribution Model (₹50/Month): Creating high-impact societal change through simple, affordable monthly contributions.
Shirt-Pocket Camera & Dignity Policy: To respect the dignity of beneficiaries, we never shove cameras in their faces. Using unobtrusive 'shirt-pocket cameras', we capture natural footage—shared on our YouTube channel solely to inspire others to join this movement of good deeds.
100% Radical Transparency: Every single rupee raised and spent is documented, audited, and published on this portal for complete trust.
மனிதநேய நெஞ்சங்களை அன்போடு வரவேற்கிறோம்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
"தீரா அறம் செய்வோம் சமூக நல அமைப்பு"
" என்பது விளம்பர வெளிச்சங்களின்றி, எளிய மக்களின் உண்மையான தேவைகளைத் தேடிச் சென்று சேவை செய்யும் ஒரு தன்னலமற்ற மக்கள் இயக்கம்.
நமது சமூகத்தில் ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக நிற்பதே நமது முதன்மை நோக்கமாகும்.
நமது 3 முதன்மைக் கொள்கைகள்:
மாதாந்திர ₹50 பங்களிப்பு: மாபெரும் மாற்றங்கள் பெரிய தொகையிலிருந்து தொடங்குவதில்லை; எளிய மக்களின் சிறுகச் சேமிக்கும் சிறு துளி நிதியிலிருந்தே உருவாகின்றன.
கண்ணியம் காக்கும் "சட்டைப் பைக் கேமரா" (Shirt-Pocket Camera Policy): உதவி பெறும் மக்களின் முகத்திற்கு நேராகக் கேமராவைப் பிடித்து அவர்களைச் சங்கடப்படுத்தாமல், அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் 'சட்டைப் பைக் கேமரா' மூலம் இயல்பாகப் பதிவுகள் செய்யப்படுகின்றன. "இந்த அறப்பணியைப் பார்த்து இன்னும் நாலு நல்ல உள்ளங்கள் உதவிக்கு வர வேண்டும்" என்ற நல்நோக்கத்தோடு மட்டுமே இவை நமது அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் பகிரப்படுகின்றன.
100% நிதி வெளிப்படைத்தன்மை: நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயின் வரவு-செலவுக் கணக்குகளும், மருத்துவப் பில்களும் இணையதளத்தில் பகிரங்கமாக அனைவரின் பார்வைக்கும் பதிவேற்றப்படும்.
நமது முதன்மை அறப்பணிகள்
(Our Core Social Services)
Theera Aram Seivom (TAS) operates primarily in four key areas through the monthly ₹50 micro-contributions of everyday people:
(தீரா அறம் செய்வோம் (TAS) இயக்கம் எளிய மக்களின் மாதாந்திர ₹50 பங்களிப்பின் மூலம் பின்வரும் களங்களில் முதன்மையாகச் செயல்படுகிறது: )
அவசரகால உணவு & நிவாரணம்
திடீர் விபத்துக்கள் அல்லது இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் எளிய குடும்பங்களுக்கு உடனடி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல்.
Emergency Relief & Food Distribution
Immediate food and supply relief during sudden crises or disasters.
அவசர மருத்துவ உதவி
எளிய குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அவசர மருத்துவக் கட்டணங்கள்(₹5000க்கும் குறைவாக) மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்க உதவுதல்.
Emergency Medical Assistance
Support for medical bills(Less than ₹5000), emergency treatments, and essential medicines.
முதியோர் & ஆதரவற்றோர் அரவணைப்பு
ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்குத் தேவையான உணவு, உடைகள் மற்றும் மாதாந்திர வாழ்வாதாரப் பொருட்கள் வழங்குதல்.
Elderly Care
Care for Elders & Destitute
Providing food, clothing, and basic living essentials for abandoned elders.
எளிய மாணவர் கல்வி உதவி
வறுமை காரணமாகக் கல்வித் தடைபடும் சூழலில் உள்ள ஏழை மாணவர்களின் பள்ளி/கல்லூரி கட்டணங்களுக்கு உறுதுணையாக நிற்பது.
Educational Support
Assisting poor and deserving students with school and college fees.(what we can)
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உதவிகள் மற்றும் அத்தியாவசிய ஆதரவுகளை வழங்குதல். தேவைக்கேற்ப உதவி உபகரணங்கள், அடிப்படை தேவைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் உதவிகளை TAS மூலம் வழங்குகிறோம்.
Support for Differently Abled
Understanding the needs of differently abled persons and providing essential support to make their daily lives easier. Based on genuine needs, TAS extends assistance such as basic necessities, support equipment and other essential help that can improve their quality of life.
மற்ற உதவித் திட்டங்கள் தொலைதூர மற்றும் தேவைகள் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை கொண்டு சேர்த்தல். தேவையான இடங்களில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான உதவிகள், அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பிற சமூக உதவிகளையும் TAS மேற்கொள்கிறது.
Other Support Initiatives
Extending basic facilities and essential support to people living in remote and underserved areas. TAS also works to support communities through basic needs assistance, access to essential facilities, awareness of relevant government welfare schemes, and other community-based initiatives based on genuine needs.